பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பயங்கர விபத்து... பண்ருட்டி அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்... 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி.!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த விபத்தில் காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் வலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 80க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ் மூலமாக கடலூரில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஐந்து பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் காயமடைந்த பல பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக மீட்பு பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.