#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரருக்கு கொரோனா தொற்று! என்ன காரணம்?
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸானது விளையாட்டு வீரர்களையும் தாக்கி வருகிறது. இந்தநிலையில், உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஜோகோவிச்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
உலக தரவரிசையில் 33வது இடத்தில் உள்ள போர்னா கொரிக்-க்கு கடந்த திங்கட் கிழமை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அதே தினத்தில் ட்ராய்க்கி என்ற டென்னிஸ் வீரருக்கும், கடந்த ஞாயிற்றுக்கிழமை திமிட்ரோவ் என்ற டென்னிஸ் வீரருக்கும் கொரோனா கண்டறியப்பட்டிருந்தது. இவர்களும் ஜோக்கோவிச்சுடன் தொடரில் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்காட்சி போட்டியை பார்க்க ஆயிரக்கணக்காக ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. மருத்துவ பாதுகாப்பு விதிமுறைகளை வீரர்களும், பார்வையாளர்களும் முறையாக கடைப்பிடிக்காதது தான் கொரோனா தொற்று ஏற்பட காரணம் என்று நிக் கிர்ஜியோஸ் உள்பட முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.