கொரோனா பாதித்த திமுக முன்னாள் அமைச்சர் பலி! சோகத்தில் திமுகவினர்!



former dmk minister died

திமுகவின் முன்னாள் அமைச்சரும், பேச்சாளருமான ரகுமான்கான் சென்னையில் மாரடைப்பால்  காலமானார். கொரோனா தொற்றுக்கு ஆளான தி.மு.க. முன்னாள் அமைச்சர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்தார். இன்று காலை ரகுமான்கானுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

திமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ரகுமான்கான். திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராகவும் ரகுமான் கான் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் சேப்பாக்கம் தொகுதியிலும், 1989 இல் பூங்காநகர் தொகுதியிலும், 1996 இல் இராமநாதபுரம் தொகுதியிலும் வெற்றி கண்டவர்.

 1996-ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சரானார் ரகுமான் கான். திமுகவின் தலைமை செய்தித் தொடர்பாளராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.