தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் தந்ததாக பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் கைது.! யார் அவர்கள்.?
அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாகவும், கட்சிப் பணிகளுக்காக செலவு செய்த தொகையை திருப்பித் தராமலும் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து. ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கடந்த 17-ந் தேதி முதல் தலைமறைவானார். இதனையடுத்து தனிப்படைகள் அமைத்து போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் நேற்று கர்நாடகவில் வைத்து கைது செய்தனர். மேலும், ராஜேந்திரா பாலாஜிக்கு அடைக்கலம் தந்ததாக பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் என்பவரை கர்நாடகாவில் போலீசார் கைது செய்தனர். போலீஸ் தேடுவதனால் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் தந்ததாக ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
மேலும், ராமகிருஷ்ணனின் உறவினரும் பாஜகவை சேர்ந்தவருமான நாகேஷ் என்பவர் ராஜேந்திர பாலாஜிக்கு கார் ஓட்டியுள்ளார். தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜிக்கு தங்குமிடம், உணவு, வாகன வசதியை பாஜக நிர்வாகி ஏற்பாடு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பாஜக நிர்வாகி ஒருவரே அடைக்கலம் தந்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.