பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
மெட்ரோ ரயிலில் இலவச பயணம்! சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!
சென்னை மெட்ரோ முதலாம் கட்ட வழித்தடத்தில் உள்ள 32 ரயில் நிலையங்களில் இருந்து இன்று மட்டும் பயணிகள் இலவசமாக பயணம் செய்யலாம் என சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
வண்ணாரப்பேட்டை - டிஎம்எஸ் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 10 கிலோமீட்டர் தொலைவிலானமெட்ரோ வழித்தடத்தை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதன்மூலம் இந்த வழித்தடங்கள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இந்நிலையில் முதலாம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடம் தற்பொழுது நீட்டிக்கப்பட்டுள்ளதால் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கத்தில் சோதனை முயற்சியாக இன்று இந்த வழித்தடங்களில் இலவச ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதன்மூலம் முதலாம் கட்ட வழித்தடங்களான பரங்கி மலையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரையிலும் சென்னை விமான நிலையத்திலிருந்து வண்ணாரப்பேட்டை வரையிலும் உள்ள 32 மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து இன்று பயணிகள் இலவசமாக பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் இந்த சோதனை ஓட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கு பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.