பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சென்னை மெட்ரோ ரயிலில் இலவச பயணம்! காரணம் என்ன தெரியுமா?
சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் இயந்திரம் மற்றும் தகவல் பரிமாற்ற இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இலவசமாக பயணிக்க பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
சென்னையில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயணிகள் டிக்கெட் இல்லாமல் இலவசமாக அனுமதிக்கபடுகின்றனர். சென்னை விமானநிலையம், வண்ணாரப்பேட்டை ஆகிய மெட்ரோ நிலையங்களில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பழுது சரி செய்யப்படும் வரை அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கத்தைவிட பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.