மலைப்பாம்பை பிடித்து இளைஞர்கள் செய்த மோசமான காரியம்.! செல்போனை கண்டு அதிர்ச்சியில் மூழ்கிய அதிகாரிகள்.!
குமரி மாவட்டத்தில் சில பகுதிகளில் இளைஞர்கள் சிலர் விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவதாகவும், தடை செய்யப்பட்ட குளத்தில் மீன்கள் பிடிப்பதாகவும் வனத்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு ரோந்து சென்றுள்ளனர். அப்பொழுது அங்கு அச்சங்குளத்தில் மாணிக்ராஜ் மற்றும் சிவகுமார் இருவரும் மீன்பிடித்து கொண்டுள்ளனர். இருவரையும் பிடித்து அதிகாரிகள் தனியாகதனியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர்.
பின்னர் அதிகாரிகள் சிவகுமாரின் செல்போனை வாங்கி வனத்துறை ஆய்வு செய்தார்கள். அதில் இளைஞர்கள் சிலர் ஆமை, மலைப்பாம்பு, உடும்பு உள்ளிட்டவற்றைச் சமைத்து அவற்றை ருசித்துச் சாப்பிடும் வீடியோக்கள் இடம்பெற்றிருந்தன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், சிவகுமாரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டார்கள்.
அப்பொழுது சிவகுமார் பொற்றையடி மருந்துவாழ்மலையில் தன்னுடைய நண்பர் தினேஷ் என்பவருடன் சேர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடியதை ஒப்புக்கொண்டார். மேலும் வேட்டையாடிய விலங்குகளைச் சமைத்துச் சாப்பிட்டதோடு, அவற்றை வீடியோவாகவும் எடுத்து தனது செல்போனில் வைத்துள்ளதாக' கூறியுள்ளார்.
இதையடுத்து சிவகுமார், தினேஷ் ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பாதுகாக்கப்பட்ட பகுதியில் வலைவிரித்து மீன்பிடித்த மாணிக்கராஜை எச்சரித்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.