தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா.! தொடர்ந்து 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு.!



full lock down in tamilnadu

தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. தமிழகத்தில் ஆரம்பத்தில் வேகமாக பரவிய கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மீண்டும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. 

கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருவதால் தமிழகம் முழுவதும் மதியம் 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 26,465 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

full lock down

இந்த நிலையில், கொரோனா  பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி, இறைச்சி கடைகளை தவிர இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன. 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும். நியாய விலைக்கடைகள் 12 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.