#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
7 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் முழு ஊரடங்கு.! வெறிச்சோடிய சென்னை மாநகரம்.!
ஆரம்பத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸ் சமீப காலமாக குறைந்து வந்த நிலையில், தற்போது கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமெடுத்துவருவதால் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும் தற்போது கொரோனா பரவல் வேகமெடுத்து வருவதால், வரும் திங்கட்கிழமை முதல் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தமிழகம் முழுவதும் நேற்று இரவு 10 மணி முதல் தொடங்கிய முழு ஊரடங்கு இன்று முழுவதும் அமலில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை செயல்பாட்டில் இருக்கும்.
இந்த முழு ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி தேவையின்றி வெளியே வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கை கண்காணிப்பதற்காக பல இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனைச்சாவடிகளில் ஒரு காவல்துறை அதிகாரி, வருவாய்த்துறை அதிகாரி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி ஆகியோர் வாகன தணிக்கை பணிகளில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.