#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா.! இப்டியே போனால் தாங்காது.! இன்று காலை முதல் அமலுக்கு வந்த புதிய கட்டுப்பாடுகள்.!
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள்உச்சம் அடைந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 31,892 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆனாலும் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை தீவிரப்படுத்துவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்தநிலையில், தமிழகம் முழுவதும் இன்று முதல் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும். இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மின் வணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் வினியோகம் செய்ய காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஏ.டி.எம்., பெட்ரோல் டீசல் பங்க்குகள் ஆகியவை எப்போதும் வழக்கம்போல் போல செயல்படும். அதேபோல், ஆங்கில மற்றும் நாட்டு மருந்து கடைகள் திறக்க வழக்கம்போல் அனுமதிக்கப்படும். காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்.
அத்தியாவசியப் பணிகளான திருமணம், உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ- பாஸ் பதிவு முறை வரும் 17-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும். இந்தநிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.