பெண்ணை நிர்வாணப்படுத்தி கை, கால்களை முறித்து நடுக்காட்டில் வைத்து அரங்கேறிய கொடுமை..! சேலத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்..!



girl-attacked-by-husband-relatives-for-illegal-relation

சேலத்தில் கள்ளக்காதலில் ஈடுபட பெண்ணை கணவனின் உறவினர்கள் கொடுமையாக தாக்கி, கை, கால்களை முறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் கலா. இவரது கணவன் சின்னக்குள்ளன். இவர்களுக்கு வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கலாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இது கணவனுக்கு தெரியவரவே அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் கலா அதை பொருட்படுத்துவதாக இல்லை. ஒருகட்டத்தில் கலாவின் உறவினர்களும் அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர். கலா அதையும் கேட்பதாக இல்லை.

Crime

இந்நிலையில் விறகு பொறுக்க காட்டிற்குள் சென்ற கலா அங்கு சின்னசாமியை பார்த்து அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை கலா கணவனின் உறவினர்கள் ரவி, செல்லப்பன் மேலும் ஒருவர் என மூன்று பேர் பார்த்துவிடவே அவர்கள் கலாவை கடுமையாக தாக்கி, அவரை நிர்வாண படுத்து உடம்பெல்லாம் கிழித்து, கை, கால்களை முறித்து அவர் இறந்துவிட்டார் என நினைத்து அங்கையே தூக்கி வீசிவிட்டு வந்துள்ளனர்.

மறுநாள் காலை அந்த பக்கம் சென்றவர்கள் கலா உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடப்பதை பார்த்து மருத்துவமனையில் சேர்க்க, அங்கு கலாவுக்கு சிகிச்சை நடைபெற்றுவருகிறது. இதுகுறித்து கலா கொடுத்த புகாரை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.