ரூ.5000 வரதட்சணைக்காக புதுமணப்பெண் அடித்தே கொலை; குடிகார மாப்பிள்ளை கொடூர செயல்.!



in Uttar Pradesh Bijinor Newly Weds Girl Killed by Husband 5000 Dowry 

 

புதுமணப்பெண்ணை திருமணமான சிலமணிநேரத்தில் கணவர் கொலை செய்த பேரதிர்ச்சி சம்பவம் நெஞ்சை நடுநடுங்க வைக்கிறது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பீஜினோர் மாவட்டம், ஹுஸைனபூர் கிராமத்தில் வசித்து வருபவர் சோயிப் அகமத். இதே பகுதியில் வசித்து வருபவர் தர்அன்னும் (வயது 22). தம்பதிகள் இருவருக்கும் திருமணம் நடக்க பெற்றோர்களால் முடிவெடுக்கப்பட்டு, கடந்த ஜன.07 அன்று திருமணம் நடைபெற்று முடிந்தது. 

இதையும் படிங்க: மனைவியின் பலாத்கார விடியோவை நேரலையில் பார்த்து ரசித்த கொடூர கணவன்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

இதனிடையே, திருமணத்தின்போது, தனக்கு ரூ.5000 வரதட்சணை வேண்டும் என அகமத் மணப்பெண் வீட்டாரிடம் சண்டையிட்டு இருக்கிறார். பின் அவரை அப்போதைக்கு சமாதானம் செய்து வைத்து திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

Uttar pradesh

போதையில் புதுமணப்பெண் அடித்தே கொலை

வீட்டிற்கு மதுபோதையில் வந்த அகமத், வரதட்சணை கேட்டு பிரச்சனை செய்து, ஆத்திரத்தில் மனைவியை கொடூரமாக தாக்கி இருக்கிறார். இதில் புதுமணப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அண்ணியுடன் ஓரினசேர்க்கை காதல்; திருமணம் செய்ய அடம்பிடித்து பகீர் சம்பவம்.!