#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒரே நேரத்தில் அனைத்து ஆடுகளும் திருட்டு... மொத்த வாழ்வாதாரம் போச்சே..! கண்ணீர் விடும் மூதாட்டி.! வீடியோவை பார்க்கும்போதே கண்ணீர் வருகிறது
புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே உள்ள கிராமங்களில் சமீப நாட்களாக ஆடு திருட்டு அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் விவசாயிகள் வீடுகளில் வளர்க்கும் ஆடுகளை திருடிச் செல்லும் பலர் உருவாகிவிட்டனர்.
இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம், மழையூர் அருகே உள்ள தீத்தானிப்பட்டி கிராமத்தில் அம்மாக்கண்ணு என்ற பெண் ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். குடும்பத்தில் யாரும் இல்லாததால் தனது வாழ்வாதாரத்திற்காக ஆடுகளை வளர்த்து வாழ்ந்து வந்துள்ளார். இந்தநிலையில், கடந்தவாரம். அம்மாக்கண்ணு வளர்த்த இரண்டு ஆடுகளை மர்ம நபர்கள் யாரோ திருடிச்சென்றனர்.
இதனால், மனவேதனையில் இருந்த அம்மாக்கண்ணுவிற்கு நேற்று இரவு பேரதிர்ச்சி காத்திருந்தது. உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது தனது வீட்டில் இருந்த அனைத்து ஆடுகளையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதனால் தனது மொத்த வாழ்வாதாரத்தையும் இழந்த அம்மாகண்ணு மனவேதனையில் உறவினருடன் சென்று மழையூர் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.
Old women crying for her goats pic.twitter.com/PKyuR4TvDt
— Santhosh (@Santhos14374846) September 13, 2022
ஆனால் காவல்நிலையத்தில், இது மாதிரி நிறைய ஆடுகள் காணமல் போயிருக்கு.. போங்கம்மா கெடச்சா சொல்லுறோம் என திருப்பி அனுப்பியுள்ளனர். இதற்கு ஒரு நியாயம் கிடைக்காதா என்ற குமுறலுடன் கண்ணீர் சிந்தி வீடு திரும்பினார் அம்மாக்கண்ணு. இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த அம்மா கதறி அழும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலான நிலையில், பலரும் மூதாட்டிக்கு நியாயம் வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.