35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
ரூ.12 கோடிக்கு மேல் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்கள்! கொள்ளையர்களை உறுதி செய்தனர் போலீசார்!
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அமைந்துள்ள இடம் 24 மணிநேரமும் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதி ஆகும். பேருந்து போக்குவரத்தும் இருந்து கொண்டே இருக்கும். நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்ததும் இரவில் ஊழியர்கள் கடையின் ஷட்டரை பூட்டிவிட்டு சென்று விட்டனர். இந்தநிலையில் நேற்று காலை 9 மணிக்கு ஊழியர்கள் வழக்கம்போல் வந்து கடையை திறந்தனர். கடையின் உள்ளே சென்ற அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
லலிதா ஜூவல்லரியில் சுவற்றை துளைப்போட்டு கீழ் தளத்தில் உள்ள தங்கம், டைமண்ட் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து கொள்ளையர்களை பிடிப்பதற்கு 7 இன்ஸ்பெக்டர்களை கொண்ட தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
அந்த கடையில் ரூ.12 கோடிக்கு மேல் மதிப்புள்ள தங்க நகைகள், 1 கிலோவுக்கும் அதிகமான வைரம் மற்றும் பிளாட்டின நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்தநிலையில் கடைக்குள் தரைத்தளத்தின் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, கொள்ளையர்கள் இருவர் கடைக்குள் வந்தது பதிவாகி உள்ளது.
மேலும் கொள்ளையர்கள் ஸ்வெட்டர், மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்துகொண்டு, முகங்கள் தெரியாத அளவிற்கு பொம்மை முகமூடி அணிந்து இருந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வடமாநில கொள்ளையர்கள் என தனிப்படை போலீசார் உறுதி செய்துள்ளதாக தகவலகில் வெளியாகி உள்ளது.