பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நிவர் புயல் எதிரொலி! பாதுகாப்பு கருதி தமிழக முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று இரவு தீவிர புயலாக வலுப்பெற்று நாளை பிற்பகலில், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் டெல்டா மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், புயல் கரையை கடக்கும்போது 100 முதல் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த வலுவான புயல் மற்றும் கனமழையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புயல் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நிவர் புயல் காரணமாக நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.