தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இனி 10, +2 வகுப்புகளில் தமிழில் படித்திருந்தால் அரசு பணியில் முன்னுரிமை!
இனி 10, +2 வகுப்புகளிலும் மற்றும் பட்டப்பிடிப்பிலும் தமிழில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே அரசு பணியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறி இன்று மசோதா ஒன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதுவரை அரசு பணியில் தமிழ் வழியில் பட்டப்படிப்பு படித்தோருக்கு 20% மட்டுமே இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பட்டப்படிப்பு மட்டுமின்றி 10 மற்றும் 12 வகுப்புகளில் தமிழில் படித்திருந்தால் அரசு பணிக்கு முன்னுரிமை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து சட்டத்திருத்த மசோதாவை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார். எனவே விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.