#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வரதட்சணை கொடுமை ஒரு பக்கம்.. பாலியல் தொல்லை மறுபுறம்.. கணவரின் கொடுமையில் சிக்கி தவிக்கும் மனைவி.!
குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். அந்த இளம்பெண்ணின் கணவர் எம்பிஏ படித்து முடித்து விட்டு சொந்தமாக டெக்ஸ்டைல்ஸ் நடத்தி வருவதாக மணமகன் தரப்பில் கூறியதை அடுத்து அந்த இளம்பெண்ணுக்கு 50 சவரன் நகையை போட்டு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
ஆனால் ஒரு குழந்தை பிறந்த பிறகு தான் அவர் எம்பிஏ படிக்கவே இல்லை என்ற விவரம் தெரியவந்துள்ளது. அதனையடுத்து அந்த இளம்பெண் லோன் வாங்கி சொந்தமாக டிராவல்ஸ் வைத்து கொடுத்துள்ளார். அதிலும் கணவர் உருப்படியாக எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருந்து வந்துள்ளார்.
அதுமட்டுமின்றி அந்த இளம்பெண்ணின் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் அந்த பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும் கணவரின் ஆண் நண்பர்களுடன் பழக சொல்லி இளம்பெண்ணை கொடுமை செய்து வந்துள்ளார் அவளின் கணவர். இதனால் பொருமையிழந்த அந்த இளம்பெண் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். தற்போது இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.