மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னையில் நடந்த துப்பாக்கிச் சூடு! ஆறு குண்டுகள் பாய்ந்து ஒருவர் பலி!
சென்னையை அடுத்த ஆவடியில் ராணுவ ஆயுதத் தொழிற்சாலையில் பாதுகாப்பு ஊழியர் சக ஊழியரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சென்னை அருகே ஆவடியில் மத்திய கனரக வாகன தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பணிமாற்றம் செய்ய வந்த போது அவர்களிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கனரக வாகன தொழிற்சாலையில் பணிபுரியும் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த நிலாம்பர் சிங்கா என்பவர், கடந்த இரண்டு நாட்களாக மன உளைச்சலால் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நிலாம்பர் சிங்கா என்ற ஊழியர், தனது சக ஊழியரான கிரிஜேஷ்குமார் என்பரை நோக்கி துப்பக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் கிரிஜேஷ்குமார் மீது ஆறு குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். உயிரிழந்த கிரிஜேஷ்குமார் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.