#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பசித்த வயிறு,பணம் இல்லா வாழ்க்கை.. பிரபல சிஎஸ்கே வீரர் பதிவால் நெகிழ்ச்சியுடன் குவியும் வாழ்த்துக்கள்!!
கத்தார் தலைநகரான தோகாவில் 23 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கோமதி மாரிமுத்து என்ற பெண் 2 நிமிடம் 20 நொடிகளில் கடந்து தங்க பதக்கத்தை வென்றார்.கோமதி மாரிமுத்து தமிழகம் திருச்சியை சேர்ந்த முடிகண்டம் பகுதியை சேர்ந்தவர்.
வறுமையான குடும்பத்தில் பிறந்த கோமதிக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். எனவே அவர் தனது கடின உழைப்பாலும், தீராத விடாமுயற்சியாலும் போராடி ஆசிய போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.இந்நிலையில் கோமதிக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது . மேலும் அவரை ஊக்குவிக்கும் விதமாக நடிகர் ரோபோ சங்கர் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை அளித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி தமிழகமே கொண்டாடி வரும் தங்க மங்கையான கோமதி மாரிமுத்துவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் பல அரசியல் தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோமதியின் இந்த வெற்றிக்கு வாழ்த்து கூறி சிஎஸ்கே கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பசித்த வயிறு, பணம் இல்லாத வாழ்க்கை,உதவ ஒருவரும் இல்லை. ஆனால் இந்த பெண்ணின் வெற்றி கதை நமக்கு ஒரு பாடம். நம்பிக்கை வெற்றியோடு வரும் ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளவர்களிடம் மட்டுமே வரும் என்பதற்கு கோமதி மாரிமுத்து ஒரு சாட்சி என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் வரவேற்று அழைத்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்,
பசித்த வயிறு.பணமில்லா வாழ்க்கை.உதவ ஒருவரும் இல்லை.ஆனால் இந்த பெண்ணின் வெற்றி கதை நமக்கு ஒரு பாடம்.நம்பிக்கை வெற்றியோடு வரும் ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளவர்களிடம் மட்டுமே வரும் என்பதற்கு #GomathiMarimuthu ஒரு சாட்சி..Hats-off #Gomathi you are such an Inspiration to the Nation pic.twitter.com/nKonTRZHm6
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 28, 2019