#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
7 வயது சிறுமி வன்கொடுமை! எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க! பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? ஹர்பஜன் சிங் வேதனை!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தை சேர்ந்த நாகூரான் என்பவரது 7வயது மகள் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ராஜேஷ் (29) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது சிறுமியைத் தானே வன்கொடுமை செய்து அடித்துக்கொன்றதாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து, ராஜேஷை போலீசார் கைது கைது செய்துள்ளனர்.
இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு சுமார் 5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
செதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே. பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க! உலகம் அழியப்போகல..அழிச்சுக்கிட்டு இருக்கோம்.நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல.ரொம்ப கஷ்டமா இருக்குயா#JusticeforJayapriya
— Harbhajan Turbanator (@harbhajan_singh) July 2, 2020
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அறிந்து ரொம்ப கஷ்டமாக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "செதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே. பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க! உலகம் அழியப்போகல. அழிச்சுக்கிட்டு இருக்கோம். நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல.ரொம்ப கஷ்டமா இருக்குயா என வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.