#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தமிழகத்தில் வெளுத்துவாங்கப்போகும் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை - திருகோணமலையில் இருந்து கிழக்கே 340 கி.மீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு - தென்கிழக்கே 580 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இன்று மாலையில் மேற்கு - வடமேற்கு திசையில், மேற்கு - தென்மேற்கு திசயில் நகர்ந்து பிப்.1ம் தேதி இலங்கை கடற்கரையை கடக்கும்.
இதனால் 31ம் தேதியான இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் கறைகள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
1ம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் அங்கே இடங்களில், உள்தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தலைநகர் சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 34 டிகிரி செல்சியமும் வெப்பம் பதிவாகலாம். மீனவர்கள் இன்று மற்றும் நாளை (ஜனவரி 31, பிப்ரவரி 01) இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோர பகுதி, வங்கக்கடல், மன்னர் வளைகுடா பகுதிக்கு செல்ல வேண்டாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.