#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சென்னையில் ஏற்பட்ட திடீர் போக்குவரத்து நெரிசல்! பல தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை!
சென்னை பெசன்ட் நகர், அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின், 47ம் ஆண்டு பெருவிழா, இன்று கொடி ஏற்றத்துடன், கோலாகலமாக துவங்குகிறது.
இந்த கொடியேற்ற விழா இன்று மாலை துவங்குகிறது. அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு, சென்னையில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். இந்தநிலையில் பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதாவின் அருளை பெறுவதற்கு ஏராளமான பக்தர்கள் பாதையாத்திரை செல்கின்றனர்.
பக்தர்கள் சாலையின் இரண்டுபுறமும் பாதையாத்திரை செல்கின்றனர். இதனால் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை கடற்கரை சாலையில் இருந்து பெசன்ட் நகர் வரை வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த சாலைகளில் உள்ள தனியார் நிறுவனங்கள் பகுதிநேர விடுமுறை அளித்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரையிலிருந்து, பெசன்ட்நகர் வேளாங்கண்ணி மாதா ஆலயம் வரை, மக்கள் கூட்டமாக காணப்படுகிறது. இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் இன்று இரவு 10 மணி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.