#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாகனத்தின் பின்புறம் அமர்ந்து இருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்! இதனால் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்ன தெரியுமா?
தற்போது வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமமான விஷயமாக இருப்பது ஹெல்மெட். தற்போதைய புதிய சட்டத்தின்படி வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் அணியவில்லை என்றால் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது அவசியமான விஷயம் ஒன்றுதான். வாகனம் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணிந்திருந்தால் விபத்து ஏற்படும் போது அவர்களை தலைக்கவசம் காப்பாற்றும். ஆனால் தற்போது வாகனத்தின் பின்புறம் அமர்ந்து இருப்பவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது மிகவும் சிரமமாய் உள்ளது.
வீட்டில் பிறந்த கைக்குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் போது, மருத்துவமனைக்கு மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துச் செல்லும் கட்டாயம் ஏற்படும். அந்த சமயத்தில் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு மனைவி தலைக்கவசம் அணிந்தால், அது அந்த தாய்க்கு சற்று சிரமமாகவும், அதேபோல குழந்தைக்கு தன் தாய் வேறு என்றோ தோன்றி குழந்தை ஆரம்பிக்கின்றது.
அதுமட்டுமின்றி தற்போது செல்லும் வழியில் யாரேனும் மயக்க நிலையிலேயோ அல்லது உடம்பு சரியில்லாமல் இருக்கும் தருவாயில் அவர்களை ஹெல்மெட் இல்லாமல் வாகனத்தில் ஏற்றுவதற்கு யோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டம் பொதுமக்களுக்கு சிரமமாகவே உள்ளது என கூறுகின்றனர் வாகன ஓட்டிகள்.