#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொடூர சம்பவம்.. என் பேச்சை மீறி உன் அம்மா வீட்டிற்கு செல்கிறாயா.. மனைவி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவன்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள நாககுப்பம் கிராமத்தில் வசித்து வருபவர்கள் ராமர் - சின்னப்பிள்ளை தம்பதியினர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் அவர்கள் மூவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 20 வருடங்களாக ராமர் தனது மாமியார் குடும்பத்துடன் எந்த வித தொடர்பிலும் இல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் சின்னப்பிள்ளையின் தாய் உயிரிழந்துள்ளார். இதனால் சின்னப்பிள்ளை தனது தாயின் ஈம சடங்கிற்கு சென்று வீடு திரும்பி உள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த ராமர் தனது சொல் பேச்சை மீறி உன் அம்மா வீட்டிற்கு ஏன் சென்றாய் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ராமர் அம்மிக்கல்லை தூக்கி மனைவி சின்னபிள்ளை தலையின் மீது போட்டு கொலை செய்துவிட்டு காவல் நிலையம் சென்று சரணடைந்துள்ளார்.
பின்னர் சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த சின்னப் பிள்ளையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.