மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி விடுதியில் மீண்டும் ஒரு ப்ளஸ்-டூ மாணவி தற்கொலை: தடதடக்கும் திருத்தணி..!
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகேயுள்ள தக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூசனம். இவர் ஒரு விவசாயி. இவரது மனைவி முருகம்மாள். இவர்களது ஒரே மகள் சரளா (17). இவர் திருவள்ளுவர் மாவட்டம், கீழச்சேரி ஊராட்சியில் இயங்கிவரும் அரசு நிதி உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி ப்ளஸ்-டூ படித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதற்காக சீருடை அணிந்து சக தோழிகளுடன் பேசிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் அவரை தவிர மற்றவர்கள் உணவு அருந்த சென்றுள்ளனர். அப்போது அறையில் தனியாக இருந்த மாணவி சரளா துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சந்திர தாசன், உதவி காவல் ஆய்வாளர் இளங்கோ சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவி தற்கொலை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகேர்லா செபாஸ் கல்யாண் மற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் காவல் அதிகாரிகள் ஆகியோர் விடுதி காப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.