#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கணவன் கூப்பிடுவதை மறந்து டிவி பார்த்துக்கொண்டிருந்த மனைவி!. ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்!.
தன்னை மறந்து சீரியல் பார்த்துக்கொண்டிருந்த மனைவியால், பசியில் வந்த கணவன் சோறு போடாததால் ஆத்திரமடைந்து அவர் செய்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பட்டீஸ்வரம் அருகே முழையூர் பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம் இவர் ஒரு கூலி தொழிலாளி. அருண்மொழி என்ற பெண்ணை மணந்த சிவனந்தத்திற்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சிவானந்தம் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். இந்தநிலையில் ஒருநாள் மது அருந்திவிட்டு தள்ளாடியபடியே வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்பொழுது அவர் வீட்டிற்குள் வரும்பொழுது அவரது மனைவி டிவி பார்த்து கொண்டிருந்தார்.
டிவி பார்த்து கொண்டிருந்த அருண்மொழியிடம் சிவானந்தம் பசிக்கிறது எனக்கு சாப்பாடு போடும்படி கூறியுள்ளார். ஆனால் டிவியில் மூழ்கி பார்த்துக்கொண்டிருக்கும் அருண்மொழிக்கு இது காதிலேயே விழவில்லை.அவர் மீண்டும் மீண்டும் கூறியும் அருண்மொழி அதை கேட்கவில்லை.
இதனால் போதையில் இருந்த சிவானந்தம் ஆத்திரமடைந்து மண்ணெண்ணெயை எடுத்து வந்து தனது வாயில் ஊற்றி கொண்டு, பின்னர் ஒரு தீக்குச்சியை பற்ற வைத்து அருண்மொழி முகத்தில் கொப்பளித்துள்ளார்.
இதனால் தீப்பற்றிக்கொண்ட அருண்மொழியின் முகம், தலை, கழுத்து, தோள்பட்டை எரிந்தது.இந்நிலையில் மனைவி துடிப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவானந்தம் பயந்து அங்கிருந்து ஓடிவிட்டார்.
உடனே சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அருண்மொழியை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.