#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கணவரிடம் தவறான தொடர்பு வைத்திருந்த பெண் ... “இந்தா வாங்கிக்கோ” என்று கத்தியால் குத்திய மனைவி!!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜா - நாகம்மாள் தம்பதியினர். இவர்கள் நடுத்தர குடும்ப வர்க்கத்தை சார்ந்தவர்கள். கடந்த சில நாட்களாகவே நாகமாளுக்கு கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதில் கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை உறுதி செய்தாள் நாகம்மாள். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த நாகம்மாள் இந்த கள்ள காதலுக்கு ஒரு முடிவு கட்ட எண்ணி தனது கணவருடன் தொடர்பில் இருக்கும் ராஜு என்ற பெண்ணைத் தேடி பர்கூர் தாமரைகரை பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ராஜு விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது நாகம்மாள் அவரைத் தாக்கி தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜூயை தாக்கியுள்ளார்.
அதனையடுத்து ராஜூ சத்தம் போட்டு அலறவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை கண்ட நாகம்மாள் அங்கிருந்து தப்பி ஓடினாள். இது குறித்த புகாரின் பேரில் நாகமாளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.