#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மனைவியின் கண் எதிரே கள்ளக்காதலனை அடித்து கொலை செய்த கணவர்.. பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்.!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த ராமநாதபுரம் கிராமத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் கடந்த 8 மாதங்களாக தேவேந்திரசிங்-சாயா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இருவரும் உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். இவர்கள் குடியிருந்த அதே பகுதியில் உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த மனோஜ் என்பவரும் வசித்து வந்துள்ளார்.
இவர்கள் மூவரும் கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்துள்ளனர். தேவேந்திரசிங் வெளிவேலைக்கு செல்லும் போது சாயா மற்றும் மனோஜ் இருவருக்கு இடையே பழக்கம் ஏற்ப்பட்டு பின்னடைவின் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் ஒரு நாள் தேவேந்திரசிங் வெளியே சென்ற நேரம் பார்த்து வீட்டிற்கு வந்த மனோஜ் கணவனை விட்டு விட்டு தன்னுடன் வருமாறு சாயாவை அழைத்துள்ளார். அதற்கு சாயா ஒப்பு கொள்ளததால் ஆத்திரம் அடைந்த மனோஜ் தன்னுடன் சாயா எடுத்து கொண்ட புகைப்படங்களை கணவரிடம் காட்டி விடுவதாக மிரட்டியுள்ளார்.
அந்நேரத்தில் வெளியில் சென்ற தேவேந்திரசிங் வீட்டிற்கு திரும்பியுள்ளார். தனது மனைவியுடன் மனோஜ் இருப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்த தேவேந்திரசிங் உருட்டுக்கட்டையால் மனோஜை கடுமையாக தாக்கியுள்ளார்.
அதில் மனோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த கொலையை மறைக்க கணவன்-மனைவி இருவரும் முடிவு செய்து மனோஜின் உடலை சாக்கு மூட்டையில் கட்டினர். யாருக்கும் தெரியாமல் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவில் எடுத்துச்சென்று உடலை அப்புறப்படுத்த முடிவு செய்தனர்.
அதன்படி விடியற்காலை 2 மணியளவில் மனோஜ் உடலை எடுத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற போது போலீசாரிடம் சிக்கியுள்ளனர். அதனையடுத்து போலீசார் கணவன், மனைவி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.