#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உணவு சமைக்காத மனைவியை மண்ணெணெய் ஊற்றி கொலை செய்த கணவன்; ஆயுள் தண்டனை விதித்த புதுக்கோட்டை நீதிமன்றம்.!
மதுபோதையில் மனைவியிடம் சண்டையிட்டு அவரை கொலை செய்த கணவனுக்கு மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி, குமுலாக்குண்டு பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 40). இவரின் மனைவி அமிர்தவள்ளி (வயது 19).
மதுபோதைக்கு அடிமையாக இருந்த சேகர், மனைவியிடம் எந்நேரமும் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி 12 ம் தேதி மதுபோதையில் சேகர் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, வீட்டில் சாதம் தயார் செய்யாத நிலையில், விரைந்து அதனை செய்யுமாறு சேகர் மனைவி அமிர்தவள்ளியிடம் கூறியுள்ளார். கணவனின் மதுபழக்கத்தை கண்டித்தவாறு வேலை தொடங்கினாலும், இருதரப்பு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் உச்சகட்ட ஆத்திரத்திற்கு சென்ற சேகர், மனைவியின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதனால் அமிர்தவள்ளி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பான வழக்கு அறந்தாங்கி காவல் துறையினரால் விசாரணை நடத்தப்பட்டு, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இன்று இவ்வழக்கின் தீர்ப்பு வாசிக்கப்பட்ட நிலையில், குற்றவாளி சேகருக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 இலட்சம் அபராதம் விதித்து நீதிபதி சத்யா தீர்ப்பளித்துள்ளார்.