#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எல்லை தாண்டி சென்ற கள்ளகாதல்! முகநூலில் நூல் விட்ட இந்திய-பாக்கி ஜோடி!!
உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 34 வயதுடைய மஞ்சு என்பவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் முகநூலில் பேசி அறிமுகமான பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்பவரை சந்திப்பதற்காக விசா எடுத்துக் கொண்டு பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.
அங்கு, அவர் தன்னை முஸ்லிம் மதத்திற்கு மாற்றிக்கொண்டு நஸ்ருல்லாவை திருமணமும் செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த மஞ்சுவின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தன்னிடம் முறையாக விவாகரத்து பெறாமல் பாகிஸ்தான் சென்று வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்று அவரது மனைவி மஞ்சள் மீது குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பாகிஸ்தான் செல்வதற்காக போலியான ஆவணங்கள் மூலம் விசா எடுக்கப்பட்டுள்ளதா? என்ற பார்வையுடனும் இதனை ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.