பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
விவாகரத்து கேட்ட மனைவி, ஆத்திரத்தில் நடுரோட்டில் கணவர் செய்த வெறி செயல்...
சித்ரதுர்கா, செல்லகெரேவை சேர்ந்தவர்கள் சிவகுமார் - ஆஷா தம்பதியினர். இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை வருவது வழக்கம். சிவகுமார் தினமும் ஆஷாவை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஆஷா கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு தாய் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி செல்லகெரே நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார். மனுவை விசாரித்த நீதிபதி கணவன், மனைவி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வந்து கொண்டிருந்த சமயத்தில் எதர்ச்சையாக இருவரும் செல்லகெரே பஸ் நிலையம் அருகே சந்திக்க நேரிட்டது.
அப்போது தனது விருப்பத்திற்கு மாறாக விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வந்த மனைவியை கண்டதும் ஆத்திரமடைந்த சிவகுமார் அருகே இளநீர் விற்று கொண்டிருந்தவரின் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி ஆஷாவை வெட்டியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சிவகுமாரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆஷாவை அருகே இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.