தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
பரபரப்பு...கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலை தடம் புரளச் செய்ய சதியா?.... தண்டவாளத்தில் லாரி டயர்கள்.!
கன்னியாகுமரியில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் அதிவிரைவு ரயில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நேற்று திருச்சி ரயில் நிலையத்திலிருந்து 12:45 மணிக்கு புறப்பட்டு சென்றது. அந்த ரயில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கும் வாளடிக்கும் இடையே சென்று கொண்டிருந்தபோது ரயிலை கவிழ்க்கும் நோக்கில் இரு தண்டவாளங்களுக்கு இடையே லாரி டயர்கள் போடப்பட்டிருப்பதை கவனத்தில் இருக்கிறார் இன்ஜின் டிரைவர்.
இதனை அவர் சுகாரித்து வேகத்தை குறைப்பதற்குள் ஒரு டயரில் எஞ்சின் ஏறி இறங்கியது. இதனால் இன்ஜினில் இருந்து மற்ற பெட்டிகளுக்குச் செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரயிலில் மின்சாரம் தடைப்பட்டதால் பயணிகள் பயந்து கூச்சலிட்டனர். உடனடியாக என்ஜின் டிரைவர் திருச்சி ரயில்வே கோட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதன் காரணமாக அவ்வழியாக செல்ல இருந்த மற்ற ரயில்களும் அருகில் உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.
இந்த ரயிலிலும் பழுதான மின் இணைப்பு சரி செய்யப்பட்டு 30 நிமிட தாமதத்திற்கு பின் ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இந்த இடையூறால் ஒரு மணி நேரம் ரயில்வே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருச்சி கோட்டை ரயில்வே அதிகாரிகள் இன்று காலை டயர்கள் போடப்பட்டிருந்த தண்டவாளத்தை பரிசோதனை செய்தனர். மேலும் அங்கு போடப்பட்டிருந்தால் லாரி டயர்களையும் பறிமுதல் செய்து ரயிலை கவிழ்த்து சதி செய்த நபர்கள் யார் என தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.