பிக்பாஸ் சௌந்தர்யாவின் நடிப்பில் அட்டகாசமான டிஸ்டன்ட் திரைப்படம்; ட்ரைலர் வைரல்.!
உணவு டெலிவரி பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை., எஸ்.ஐ-க்கு ஆபாச அர்ச்சனை.. இளைஞர்கள் அடாவடி.!
சென்னையில் உள்ள பெரம்பூர், வில்லிவாக்கம் பகுதியில் வைத்து வரும் 34 வயதுடைய பெண்மணி, தனியார் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மாலை நேரத்தில், கொளத்தூரில் உள்ள சிவசக்தி நகர், மூன்றாவது தெருவில் டெலிவரி செய்ய சென்றுள்ளார். அப்போது, உணவு ஆர்டர் செய்த 2 இளைஞர்கள், உங்களின் குரல் கவர்ச்சிகரமாக உள்ளது என பேசத் தொடங்கி எல்லை மீற முயற்சித்துள்ளனர்.
எஸ்ஐ-க்கு மிரட்டல்
இதனால் சுதாரித்த பெண்மணி அங்கிருந்து வெளியே வந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் உதவி ஆய்வாளர் முரளி மனோகரிடம் நடந்ததை கூறி உதவி கேட்டுள்ளார். இதனையடுத்து, உணவு டெலிவரி செய்யப்பட்ட செல்போன் நம்பருக்கு தொடர்புகொண்டு எஸ்ஐ பேசியுள்ளார்.
இதையும் படிங்க: அட கொடுமையே... 16 வயசு பொண்ணுக்கு பாலியல் தொல்லை.!! தமிழாசிரியர் கைது.!!
அப்போது, மர்ம ஆசாமிகள் காவல் அதிகாரியையும் அவதூறாக பேசி, மிரட்டி இருக்கின்றனர். இதனால் அதிருப்தியடைந்த உதவி ஆய்வாளர், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். மேலும், கலாவையும் ராஜாமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தினார்.
இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிவசக்தி நகரில் வசித்து வரும் மனு கிருஷ்ணா (வயது 28), விஷ்ணு (வயது 26) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: "எங்க புள்ள மேல கை வைப்பியா.." பூட்டி வைத்து ஆசிரியரை தாக்கிய ஊர் மக்கள்.!! காவல்துறை குவிப்பு.!!