#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குறுக்கே வந்த பூனை... ஆத்திரத்தில் தந்தையை போட்டு தள்ளிய மகன்... சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.!
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கொலை வழக்கில் அவரது மகன் கைது செய்யப்பட்டு இருக்கும் விவகாரம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வீரமுத்து(60). இவரது மகன் குமார்(40). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். குமாருக்கு திருமணம் ஆன நிலையில் அவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். மது பழக்கத்திற்கு அடிமையான குமாருக்கும் அவரது தந்தைக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது
இந்நிலையில் நேற்று இரவு குமார் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த போது அந்தப் பகுதியில் இருந்த பூனை ஒன்று அதன் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இருந்துள்ளது. இது தொடர்பாக வேகமாக வந்த குமாரை அனைவரும் கண்டித்துள்ளனர். இப்போது அங்கிருந்த வேலன் என்பவர் குமாரிடம் கடுமையாக நடந்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த குமார் வேலனை வெட்டுவதற்காக கத்தியை எடுத்துச் சென்றுள்ளார். இதனை அவரது தந்தையான வீரமுத்து தடுக்கும் இயன்ற போது அவரது கழுத்தில் வெட்டு விழுந்து இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த வீர முத்துவை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் வீரமுத்துவின் உடலை கைப்பற்றி பிரயோத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வீரமுத்துவின் இரண்டாவது மகன் கொடுத்த புகாரின் பேரில் அவரை கொலை செய்த குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.