பெட்ரோல் பங்கில் பணம் கேட்டு தகராறு; தவெக நிர்வாகி சரமாரி தாக்குதல்.! 



in CHennai Pallavaram TVK Supporter Attack 

 

சென்னையில் உள்ள பல்லாவரம்,  திருநீர்மலை பிரதான சாலையில் இந்தியன் ஆயில்ஸ் பெட்ரோல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் அதே பகுதியில் வசித்து வரும் தமிழக வெறிக் கழகத்தின் நிர்வாகி இளங்கோவன் என்பவர், தனது கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ.200 மற்றும் ரூ.300, ரூ.1000 பணம் வாங்கி செல்வது வழக்கம் என கூறப்படுகிறது. 

பணம் கிடைக்காததால் ஆத்திரம்

இதனிடையே, நேற்று முன்தினம் வந்த இளங்கோ ரூ.10000 பணம் கொடுக்குமாறு கூறியுள்ளார். அவ்வுளவு பணம் இல்லை என பணியில் இருந்த ரஞ்சித் குமார் கூறவே, பணம் கொடுக்காத ஆத்திரத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை இளங்கோ தாக்கினார். 

இதையும் படிங்க: பயோ கேஸ் நிறுவனத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து; ஒருவர் பலி., மீட்பு பணிகள் தீவிரம்.!

chennai

காலால் பெட்ரோல் நிலைய ஊழியரை எட்டி உதைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக சிசிடிவி கேமிரா ஆதாரத்துடன் தவெக பகுதி பொருளாளர் இளங்கோவை சங்கர் நகர் காவல் துறையினர் தேடி வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.

இதையும் படிங்க: சென்னை: கலிகாலம்.. தனிமை பெண்கள் டார்கெட்.. 3 பேர் கும்பலால் 34 வயது பெண்ணுக்கு விடுதி அறையில் நடந்த பயங்கரம்..!