Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
ஆசையாக விளையாடிய ஊஞ்சலில் காத்திருந்த எமன்; கழுத்து இறுகி சிறுமி பரிதாப பலி.!
15 வயது சிறுமி ஊஞ்சலில் விளையாடியபோது, அவரின் கழுத்து இறுக்கப்பட்டு உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, கோனூர் கிராமத்தில் வசித்து வருபவர் முத்துலிங்கம். இவரின் மகள் ரிது வர்ஷினி (15). சிறுமி வீட்டில் எப்போதும் ஊஞ்சலில் விளையாடுவது வழக்கம் என கூறப்படுகிறது. இதனிடையே, துணியில் ஊஞ்சல் கட்டி சிறுமி சம்பவத்தன்று விளையாடிக்கொண்டு இருந்தார்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனம் - அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி பயங்கரம்.. கணவன் - மனைவி பரிதாப பலி.!
கழுத்து இறுகி பலி
அப்போது, அருகில் ஆட்கள் இல்லாத நிலையில், அவரின் ஊஞ்சல் துணி, திடீரென பின்கழுத்தை இறுக்கிக்கொண்டது. இதனால் சிறுமி மூச்சு விட சிரமப்பட்டு அலறியுள்ளார். சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், விரைந்து வந்து சிறுமியை மீட்டனர்.
காவல்துறை விசாரணை
சிறுமியை மீட்டபோதே அவரின் உயிர் பறிபோனது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து திட்டக்குடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்து இருக்கின்றனர்.
இதையும் படிங்க: தமிழக வாழ்வுரிமை கட்சிப் பிரமுகர் குத்திக்கொலை; கடலூரில் பரபரப்பு.. வீட்டு முன்பு சுற்றிவளைத்து பயங்கரம்.!