ஈரோடு: மனைவி மீது சந்தேகம்; 1 வயது பச்சிளம் குழந்தை அடித்துக்கொலை.. இப்படியும் கொடூர தகப்பன்?



in Erode 1 Year Old Girl Baby Killed 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி, எழுமாத்தூர், மேட்டுப்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் குமார் (வயது 35). இவரின் மனைவி பாண்டிச்செல்வி (வயது 24). குமார் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

தம்பதிகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், நவீன் மறுத்து, திவான் என இரண்டு மகன்களும், ஒன்றரை வயதுடைய தீபா ஸ்ரீ என்ற மகளும் இருக்கின்றனர். இதனிடையே, குமார் தனது மனைவி பாண்டிச்செல்வியின் நடத்தையில் எப்போதும் சந்தேகப்பட்டு வந்துள்ளார்.

இதனால் அவ்வப்போது தம்பதிகள் இடையே தகராறு உண்டாகி இருக்கிறது. மார்ச் 15 அன்று, மூத்த குழந்தைகள் இருவரும் உடல்நலபாதிப்பால் அவதிப்பட்டுள்ளனர். இதனால் அவர்களை பாண்டிச்செல்வி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

இதையும் படிங்க: தோழியை நம்பி சென்ற நபர்.. திபுதிபுவென வீட்டுக்குள் வந்த 4 பேர் கும்பல்.. நடந்த சம்பவம்.!

erode

மகள் தீபா ஸ்ரீ மட்டும் வீட்டில் தந்தையின் கவனிப்பில் இருந்தார். தொட்டிலில் குழந்தை உறங்கிக்கொண்டு ஐந்துளது. அப்போது, குழந்தையை தூக்கி சுவற்றில் அடித்த குமார், மகளை கொலை செய்தார். மேலும், குழந்தை கீழே விழுந்து அடிபட்டதாக மனைவியிடம் நாடகமாடி இருக்கிறார்.

படுகாயத்துடன் இருந்த சிறுமியை தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு குழந்தையின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் குறித்து மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் பாண்டிச்செல்வி புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் குமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் உண்மை அம்பலமானது. 

இதையும் படிங்க: லாரி - இருசக்கர வாகனம் மோதி நேர்ந்த சோகம்; முதியவர் பரிதாப பலி.!