நாமக்கல்: தேசிய நெடுஞ்சாலையில் வால்கிங்.. 2 பெண்கள் உட்பட 3 பேர் ஆம்னி வேன் மோதி மரணம்.! 



in Namakkal Accident Today 3 Dies omni Van Hits 

 

 

நடைப்பயிற்சி சென்றவர்கள் வேன் மோதி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மலையப்பன் (70), நிர்மலா (55), செல்லம்மாள் (65). இவர்கள் மூவரும் இன்று காலை நடைப்பயிற்சிக்கு சென்று இருந்தனர். 

இதையும் படிங்க: தேசிய நெடுஞ்சாலையில் அலட்சியமாக ரிவர்ஸ்; அடிச்சி தூக்கிய லாரி.. 10 பேர் படுகாயம்.. பதறவைக்கும் காட்சிகள்.!

மூவர் மரணம்

அப்போது, அவ்வழியாக வந்த ஆம்னி வேன் ஒன்று, இவர்களின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் மூவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

காவல்துறை விசாரணை

விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மழையால் சோகம்

மழை பெய்துகொண்டு இருந்தபோது, சாலையோரம் பயணித்த வாகனம், உடனடியாக நிறுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த ஆம்னி வேன் ஓட்டுனரும் மருத்துவமணியல் அனுமதிக்கப்பட்டார். விசாரணை தொடருகிறது.

இதையும் படிங்க: "ஒரு நொடி பொறுமையா வந்திருக்கலாமே?".. கார் - இருசக்கர வாகனம் மோதி இளைஞர் பலி., முந்திச்சென்று சோகம்.. பதறவைக்கும் காட்சிகள்.!