திரைப்பிரபலங்களின் விவாகரத்து; நடிகை சினேகா - பிரசன்னா நச் பதில்.!
தமிழகமே ஷாக்.! மிளகாய்பொடி தூவி, கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொடூரம்; கணவனை அலறவிட்ட மனைவி..!
குழந்தைகளை பார்க்க வந்த கணவரின் மீது மனைவி மிளகாய்பொடி தூவி எண்ணெய் ஊற்றிய சம்பவம் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் வசித்து வருபவர் அஜித் குமார். இவரது மனைவி ராதா. தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
தற்போது, கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியே வசித்து வருகிறார்கள். இதனிடையே மனைவியின் வீட்டில் வளர்ந்து வரும் தனது இரண்டு குழந்தைகளையும் பார்க்க தந்தையான அஜித்குமார் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: நகைக்காக தம்பதிகள் கொல்லப்பட்ட விவகாரம்; 2 ஆண்டுகளுக்கு பின் குற்றவாளிகள் கைது.!
கணவன் அலறல்
அப்போது, வீட்டை உட்புறமாக தாழிட்ட ராதா, வானொலியில் எண்ணெயை கொதிக்க வைத்து, கணவரின் கண்களில் மிளகாய் பொடி தூவி, எண்ணெயையும் அவரின் மீது ஊற்றி இருக்கிறார்.
இதனால் அலறிய அஜித்குமாரின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர்,அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அந்தரத்தில் தொங்கிய பேனா.. கேமரா வைத்து கழிவறையில் நோட்டமிட்ட மருத்துவர்.. பொள்ளாச்சியில் பகீர்.!