நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
விரைவில் திரைக்கு வருகிறது ஜிவி பிரகாஷின் பிளாக்மெயில் திரைப்படம்; டப்பிங் பணிகள் தொடக்கம்.!
ஜெடிஎஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில், இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் பிளாக் மெயில் (Blackmail).
வெளியீடுக்கு தயாராகிறது
இப்படத்தின் படப்பிடிப்பு உட்பட பிற பணிகள் அனைத்தும் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த நிலையில், தற்போது படம் வெளியீடுக்கு தயாராகி வருகிறது. இதனை முன்னிட்டு படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருக்கிறது.
இதையும் படிங்க: பார்க்கிங் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு; நினைவை பகிர்ந்த ஹரிஷ் கல்யாண்.!
டப்பிங் பணிகள் தொடக்கம்
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே படத்தின் பணிகள் தொடங்கினாலும், ஜிவி பிரகாஷ் நடிகர், இசையமைப்பாளர் என அடுத்தடுத்து படங்களில் பிஸியானதால், அவர் நடிப்பில் உருவாகிய பிளாக்மெயில் திரைப்படம் தாமதமானது.
திரைபடக்குழு
படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தேஜு அஸ்வினி, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இமான் இசை
டி இமான் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில், கோகுல் ஒளிப்பதிவு பணிகளையும், சான் லோகேஷ் எடிட்டிங் பணிகளையும் மேற்கொண்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை தேசிய விருது பெற்ற நடிகையா.!?