மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!



L2 Empuraan Movie release Date 


முரளி கோபி இயக்கத்தில், நடிகர்கள் பிரித்விராஜ் சுகுமாரன், மஞ்சு வாரியார், இந்திரஜித் சுகுமாரன், சானியா ஐயப்பன், சாய்குமார் உட்பட பலர் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் எம்பூரான் (Empuraan). 

இப்படம் லைகா ப்ரொடக்சன், ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது. மலையாள மொழியில் ஆக்சன்-திரில்லர் பாணியில் உருவாகும் எம்பூரான் திரைப்படம் எல்2இ L2E எனவும் அழைப்படுகிறது. 

L2 Empuraan

விறுவிறுப்புடன் படப்பிடிப்பு

படத்தின் இசையமைப்பு பணிகளை தீபக் தேவும், ஒளிப்பதிவு பணிகளை சுஜித்தும், எடிட்டிங் பணிகளை அகிலேஷ் மோகனும் மேற்கொண்டுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சிம்லா, லே, ஐரோப்பா, அமெரிக்கா, ரஷியா, சென்னை, மும்பை, புதுடெல்லி, மொராக்கோ, கேரளா, குஜராத், ஹைதராபாத், சவூதி அரேபியா என பல இடங்களில் விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்தது.

இதையும் படிங்க: அடுத்தடுத்த படங்களுக்கு ரெடியா? கோவை சூர்யா ரசிகர்கள் செய்த போஸ்டர் சம்பவம்.!

இந்நிலையில், இப்படம் மார்ச் மாதம் 27, 2025 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவுபெற்றதாகவும், பிற பணிகள் தொடங்கவுள்ளதாகவும் படக்குழு தனது தகவலை தெரிவித்துள்ளது.

மலையாளம் மொழியில் வெளியாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.


 

இதையும் படிங்க: Wow... அல்டிமேட் லெவலில், ஸ்டைல் மன்னனாக தல அஜித்.. வைரல் கிளிக் இதோ.!