புதுக்கோட்டை: 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி சோகம்; 3 பேர் பலி.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நமனசமுத்திரம், திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று பயங்கர விபத்து ஏற்பட்டது. இரண்டு கார்கள், சரக்கு வாகனம் என 3 வாகனங்கள் ஒன்றோடொன்று அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கியது.
3 வாகனங்கள் மோதி விபத்து
இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே வாகனங்களில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
3 பேர் மரணம்
மேலும், அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். விபத்தில் பலியான நபர்களை மீட்டு அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இவ்விபத்தில் காரில் வந்த செந்தமிழ்செல்வன், அவரின் மனைவி அருணா, டாடா எஸ் வாகனத்தில் வந்த சுதாகர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: முன்விரோதத்தில் பயங்கரம்.. தலை துண்டித்து கொடூர கொலை.. 2 பேர் வெறிச்செயல்.!
இதையும் படிங்க: பள்ளி மாணவிகள் 7 பேருக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியர் போக்ஸோவில் கைது.!