Ranipet: கொடிக்கம்பம் மின்சார கம்பியில் உரசி சோகம்; கூலித் தொழிலாளி பரிதாப மரணம்.!

அமைச்சரை வரவேற்க அமைக்கப்பட்ட கொடிக்கம்பம் கூலித் தொழிலாளியின் உயிரை பறித்தது.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி, ஸைனபுரம் பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார். இவர் திமுக மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பு பொறுப்பாளராக இருந்து வருகிறார். இவரின் இல்லத் திருமண விழா, நேற்று முந்தினம் காலை பானாவரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கொடிக்கம்பம் மின் கம்பத்தில் உரசி சோகம்
அப்போது திமுக மாநில அமைச்சர் காந்தி, எம்.பி ஜெகத்ரட்சகன் உட்பட பலரும் பங்கேற்றனர். திமுக நிர்வாகிகளை வரவேற்க, கட்சியின் கொடிக்கம்பம், தோரணம், பேனர்கள் சாலையில் வைக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க: கிரிவலத்தில் நடந்த சோகம்; வழிதவறிய பெண் நெஞ்சு வலியால் மரணம்.!
திருமணம் முடிந்தபின்னர், பேனர், தோரணம் போன்றவை அகற்றப்பட்டது. அப்போது, தோரணத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளி குமார் (வயது 48), மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவர் கொடிக்கம்பத்தை அகற்றும்போது, மின்கம்பி மீது கொடிக்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
இந்த விஷயம் குறித்து சோளிங்கர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த மகன் முன் கழுத்தில் கத்தியுடன் நின்ற தாய்; பதறவைக்கும் சம்பவம்..!