பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
வீட்டில் தனியாக இருந்த பாட்டியின் கழுத்தை அறுத்து... நகை பறிக்க முயன்ற பெண்.!
சேலம் உழவர் சந்தை அருகே தனியாக இருந்த மூதாட்டியை கழுத்தை அறுத்து நகையை பறிக்க முயன்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் உழவர் சந்தை அருகே உள்ள சௌந்தர் நகரை சேர்ந்தவர் நசீர் இவரது மனைவி கௌசர் ஜான்(48). இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். கௌசர் ஜான் சேலம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் கௌசர் ஜானின் தாயார் மெஹருண் நிஷா(73) வசித்து வருகிறார்.
வீட்டில் அனைவரும் வெளியே சென்ற நிலையில் மெஹர் நிஷா மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது அவர்களது வீட்டிற்கு வந்த பெண் ஒருவர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் எடுப்பதற்காக மெஹருண் நிஷா வீட்டிற்குள் சென்றபோது அவரை பின்தொடர்ந்து சென்ற பெண் அவர் கழுத்தில் மற்றும் காதல் அணிந்திருந்த நகைகளை பறிக்க முயன்றிருக்கிறார். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்கவே அருகில் இருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்துள்ளார்.
அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நகைகளை பறிக்க முயன்ற பெண்ணை மடக்கி பிடித்துள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் அந்தப் பெண்ணை கைது செய்து காயமடைந்த மெஹர் நிஷாவை மருத்துவமனையில் அனுமதித்தனர். காவல்துறையின் விசாரணையில் கைது செய்யப்பட்ட பெண் சேலம் லைன் மேடை சார்ந்த பாட்ஷா என்பவரது மனைவி ஜான்மா (32) என்பது தெரியவந்ததை அடுத்து அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். பட்டப் பகலில் நிகழ்ந்த இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.