வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
கள்ளகாதலியை காப்பாற்ற, தன் உயிரைக் கொடுத்த சோகம்.. பாறை இடுக்கில் சிக்கி காதலன் பலி.! தேனியில் பரபரப்பு.!
கிணற்றில் குதித்த கள்ளக்காதலியை மீட்க முயன்ற கள்ளக்காதலன் இறந்துவிட, பெண் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார்.
தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம், புதுப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் முருகேஸ்வரி. இவரின் கணவர் சின்னமுத்து. இவருக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் இருக்கிறார்கள். சம்பவத்தன்று தமப்திகளுக்கு இடையே வாய்த்தகராறு உண்டாகி இருக்கிறது.
தற்கொலை முயற்சி
அப்போது, ஆத்திரமடைந்த முருகேஸ்வரி தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டவர், வழியில் இருக்கும் கிணற்றில் குதித்து திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த தகவலை அறிந்த முருகேஸ்வரன் நண்பர் பரத், கிணற்றில் குதித்து காப்பாற்ற முயற்சித்துள்ளார்.
இதையும் படிங்க: உல்லாசத்தில் மூச்சுத்திணறி உயிரிழந்த 28 வயது இளம்பெண்; 2 கள்ளக்காதலர்களின் வற்புறுத்தலால் கதறக்கதற சோகம்.!
பாறை இடுக்கில் சிக்கிய கள்ளக்காதலன்
இந்த சம்பவத்தில் முருகேஸ்வரி தப்பிவிட, அவரை காப்பாற்ற முற்பட்ட பரத் பாறை இடுக்கில் சிக்கி துடித்துடித்து பலியாகினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு & மீட்பு படையினர், முருகேஸ்வரியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். பரத்தின் உடல் மீட்கப்பட்டது.
போலீசார் விசாரணை
விசாரணையில், முருகேஸ்வரி - பரத் இடையே கள்ளக்காதல் உறவு இருந்து வந்த நிலையில், இந்த விவகாரம் முருகேஸ்வரின் கணவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவ்வப்போது கணவன் - மனைவி சண்டை நடந்து வந்துள்ளது.
சம்பவத்தன்றும் சண்டை நடந்த நிலையில், தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி புறப்பட்ட முருகேஸ்வரி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். கள்ளக்காதலியை காப்பாற்ற பரத் கிணற்றில் குதித்தபோது, அவர் பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்தார் என்பது அம்பலமானது.
தீவிர சிகிச்சையில் கள்ளக்காதலி
இந்த விஷயம் குறித்து உத்தமபாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்ற்னர். மேலும், முருகேஸ்வரி கம்பம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: கள்ளக்காதலனை கழுத்தறுத்து கொன்று தலைமறைவான கள்ளக்காதலி; ஆசையாக சென்றவருக்கு அதிர்ச்சி சம்பவம்.!