ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
கலிகாலத்தில் இப்படியும் நடக்குமா? 17 வயது சிறுவனை இழுத்து ஓடிய 28 வயது இளம்பெண்.. நடந்தது என்ன?

சென்னையில் உள்ள பெரியபாளையம், அரும்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் 17 வயதுடைய மாணவர், அங்குள்ள பள்ளியில் 11 ம் வகுப்பு பயின்று வருகிறார். இதே கிராமத்தில் திருமணமான 2 குழந்தைகளுக்கு தாய் வினோதினி (வயது 28) வசித்து வருகிறார்.
17 வயதுடைய மாணவர் - வினோதினி இடையே ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் நெருக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, மாணவர் அக்கா என பேசினாலும், வினோதினிக்கு விபரீத எண்ணம் எழுந்து இருக்கிறது. திருமணம் முடிந்து கணவர், 2 குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தையும் மறந்த வினோதினி, மாணவரை காதல் வலையில் வீழ்த்தி நெருக்கம் காண்பித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையத்தால் 15,000 ஐடி வேலை; அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு.!
அக்கா-தம்பி போல நடித்து பகீர்
வெளியில் உறவினர்களை நம்ப வைக்க அக்கா - தம்பி போல பழகியவர்கள் காரணமாக, குடும்பத்தினருக்கும் சந்தேகம் எழவில்லை. இதனை சாதகமாக்கிய நிலையில் வினோதினி உல்லாசம் அனுபவித்து இருக்கிறார். இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன் மாணவர் வீட்டிற்கு வராததால், அவரை கண்டறிந்து தரக்கூறி பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரை ஏற்ற அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, மாணவர் - வினோதினி பழக்கம் தெரியவந்தது. இருவரும் கல்பட்டு கிராமத்தில் இருந்த வீட்டில் தங்கியிருந்த நிலையில், அங்கு சென்று அதிகாரிகள் வினோதினியை கைது செய்தனர். மாணவர் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: அதிகாரிகளிடமே நடித்த ஞானசேகரன்; வலிப்பு வந்ததாக நாடகமாடியது அம்பலம்.!