சாப்பிட அடம்பிடித்த பாட்டி சுத்தியலால் அடித்தே கொலை; 23 வயது இளைஞர் அதிர்ச்சி செயல்.!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, மீஞ்சூர், அத்திப்பட்டு, புதுநகர் பகுதியில் வசித்து வருபவர் சரஸ்வதி (வயது 85). இவர் வயது மூப்பு காரணமாக மனநலம் குன்றி காணப்படுகிறார். இதனால் மகள் பிரேமாவின் பராமரிப்பில் இருந்து வருகிறார்.
சரஸ்வதியுடைய பேரன் பத்மநாபன் (வயது 23). இவர் மீஞ்சூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் என்பவரை கொலை செய்த வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
இதையும் படிங்க: மகள் தற்கொலை செய்த சோகத்தால், தந்தையும் விபரீத முடிவு.. படிக்க சொன்னது குத்தமா?
சரஸ்வதியை சங்கிலி கொண்டு கட்டி குடும்பத்தினர் பராமரித்து வந்துள்ளனர். நேற்று காலை சரஸ்வதி வீட்டில் இருந்து வெளியேற, அவரை மீட்டு வந்த பத்மநாபன், பாட்டியை வீட்டுக்கு அழைத்து வந்தார். பின் சாப்பிட சப்பாத்தி கொடுக்கப்பட்டது.
மூதாட்டி சாப்பிடாமல் அடம்பிடிக்க, ஆத்திரமடைந்த பத்மநாபன், மூதாட்டியை சுத்தியல் கொண்டு ஆத்திரத்தில் தலையில் தாக்கி இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீஞ்சூர் காவல்துறையினர், சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மத்திய அமைச்சரை வரவேற்று நடிகரின் போஸ்டர்; காரணம் என்ன? பாஜக தரப்பு விளக்கம்.!