மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கல்லூரி மாணவர் கழுத்தறுத்து கொலை., எலும்புக்கூடாக சடலம்.. போதை தகராறில் பயங்கரம்..!
நண்பர்கள் மதுபானம் அருந்திக்கொண்டு இருந்தபோது, இருவரிடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சோகம் அம்பலமாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை, ரெட்டி தெரு பகுதியில் வசித்து வந்த கல்லூரி மாணவர் தினேஷ் (வயது 19). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் மாயமான நிலையில், அவரின் தந்தையான கொத்தனார் தனசேகர், காவல் நிலையத்தில் தனது மகனை கண்டறிந்து தரக்கூறி புகார் அளித்தார்.
இதையும் படிங்க: உசுரு போச்சே... மகன் திட்டியதால் ஆத்திரம்.!! போதை நபர் எடுத்த விபரீத முடிவு.!!
தினேஷ் மாயம்
கல்லூரி மாணவரான தினேஷ், சென்னையில் உள்ள வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் பிஏ முதல் ஆண்டு பயின்று வந்துள்ளார். இவர் பெற்றோரிடம் செல்போன் வாங்கித்தர கேட்டு தொந்தரவு செய்து வந்த நிலையில், பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் ஆகஸ்ட் 20 அன்று வீட்டில் இருந்து வெளியேறியவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
கொலை என ரகசிய தகவல்
இதனால் மகனை தேடி அலைந்த பெற்றோர், காவல் நிலையத்திலும் ஆக.24 அன்று புகார் பதிவு செய்தனர். இதனிடையே, தினேஷ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என ஊத்துக்கோட்டை டிஎஸ்பி-க்கு தகவல் கிடைத்தது.
மூவர் கைது
இதன்பேரில் தனிப்படை அமையாது விசாரணை நடந்தது. இதனிடையே, ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள சூளூர்பேட் பகுதியில் வசித்து வரும் நாகேஷ் (வயது 22), ஊத்துக்கோட்டை கார்த்திக் (வயது 22), 17 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடந்த விசாரணையில் தினேஷின் கொலை சம்பவம் அம்பலமானது.
போதையில் சம்பவம்
அதாவது, சம்பவத்தன்று மூவர் கும்பல் ஆந்திர மாநிலம், சென்னேரி கால்வாய் பகுதியில் உள்ள முட்புதரில் இருந்து மதுபானம் அருந்திக்கொண்டு இருந்தது. இப்பகுதி தமிழ்நாடு - ஆந்திரா எல்லையை ஒட்டியது ஆகும். இவர்களுடன் தினேஷ், ஊத்துக்கோட்டை காமேஷ் ஆகியோரும் மதுபானம் அருந்தியுள்ளனர்.
கழுத்தை வெட்டிக்கொலை
அடிதடி வழக்கில் சிறையில் இருந்த காமேஷ், அன்று வெளியே இருந்தபோது காமேஷ் - தினேஷ் இடையே போதையில் தகராறு உண்டாகியுள்ளது. இவர்களை சமாதானம் செய்ய முயற்சித்தபோது, காமேஷ் மறைத்து வைத்திருந்த கத்திய எடுத்து தினேஷின் கழுத்தில் வெட்டி இருக்கிறார். இந்த சம்பவத்தில் தினேஷ் இரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.
இதனால் பதறிப்போனவர்கள், அங்கேயே ஒரு அடிக்கு குழிதோண்டி தினேஷின் உடலை புதைத்து தப்பிச்சென்றுள்ளது அம்பலமானது. பின் இவர்களின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கைதானவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், காமேஷிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: "நம்மள சேர்ந்து வாழ விட மாட்டாங்க.." கள்ளக்காதலுக்கு பலியான கணவன்.!! 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது