அரக்கோணம்: சுவரில் பாய்ந்த மின்சாரம்; சிறுவன் பரிதாப பலி.!



 in Tiruvallur Arakonam boy Dies Electrocution 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், வின்டர்பேட்டை கிராமத்தில் வசித்து வரும் சிறுவன் . சிறுவனின் வீட்டு சுவர், மழை காரணமாக ஈரத்துடன் காணப்பட்டுள்ளது. 

அதன் வாயிலாக மின்சாரம் பாய்ந்ததாகவும் தெரியவருகிறது. இதனை அறியாத சிறுவன் சுவரின் மீது கைவைத்த நிலையில், அவரின் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். 

வீட்டில் நடந்த துயரம்

இந்த சம்பவத்தால் சிறுவன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க: திருமணமாகாத ஏக்கம்... 36 வயது இளைஞர் தற்கொலை.! திருச்சியில் சோகம்.!

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகிறார்கள். மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. மழை காலங்களில் வீட்டின் மின் இணைப்புகளை சோதித்துக்கொள்வது நல்லது.

இதையும் படிங்க: நாமக்கல்: தேசிய நெடுஞ்சாலையில் வால்கிங்.. 2 பெண்கள் உட்பட 3 பேர் ஆம்னி வேன் மோதி மரணம்.!