திருமணமாகாத ஏக்கம்... 36 வயது இளைஞர் தற்கொலை.! திருச்சியில் சோகம்.!



 in Trichy Thiruverumbur Man Suicide 

36 வயதுடைய இளைஞர் திருமண ஏக்கத்தில் தற்கொலை செய்துகொண்டார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, தெற்கு காட்டூர் பகுதியில் வசித்து வருபவர் ஜஸ்டின் ராஜ் (வயது 36). 

இவருக்கு தற்போது வரை திருமணமாகவில்லை. திருமணம் தொடர்பாக பல இடங்களில் பெண் பார்த்தும், சரிவர அமையவில்லை என கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: ஏரி ஆக்கிரமிப்பு வீடை அதிகாரிகள் இடித்துவிடுவதாக அச்சம்; தொழிலாளி பயத்தில் தற்கொலை.!

திருமணம் குறித்த ஏக்கம்

இதனால் தனக்கு திருமணம் ஆகவில்லை என உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புலம்பியவாறு சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. 

இதனிடையே கடும் மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று முன்தினம் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். 

காவல்துறை விசாரணை

இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுரை: மனைவிக்கு வளைகாப்பு நடத்திவிட்டு கணவர் தற்கொலை; கடன் தொல்லையால் விபரீதம்.!